அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

முஸ்லிமை காபிர் என்று அழைத்தால்…?


தினம் ஒரு ஹதீஸ்-22

இன்று சிலர் தனது முஸ்லிம் சகோதரரை காஃபிர் என்று அழைப்பதை சமூக வலைதளங்களில் பெரும்பாலும் காணக் கூடிய ஒன்றாகி விட்டது. அத்தகையவர்கள் பின்வரும் நபிமொழியை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَيَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرِئٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا إِنْ كَانَ كَمَا قَالَ وَإِلَّا رَجَعَتْ عَلَيْهِ
‏ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ92

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை ‘இறைமறுப்பாளனே!’ (‘காஃபிரே’) என்று விளித்தால் நிச்சயம் அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகி விடுவார். அவர் கூறியதைப் போன்று இவர் இருந்தால் சரி! இல்லாவிட்டால் அச்சொல், சொன்னவரை நோக்கித் திரும்பி விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் 92

Narrated Ibn `Umar (ra): The Prophet (sal) said:
A person who calls his (muslim) brother: O Unbeliever! (O Kafir!) would return to one of them. If it is true, (then it is) as he asserted, (but if it is not true), then it returns to him (and thus the person who made the accusation is an Unbeliever).
[Muslim 92]
Blogger Widget