அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

விடுபட்ட நோன்புகளை களா செய்தல்…


தினம் ஒரு ஹதீஸ்-229

விடுபட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக் கொள்ளலாம் என்று மார்க்கம் கூறுகிறது, அதற்கான கால அளவு நிர்ணயிக்கப்படாததால் நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது, எந்நேரமும் மனிதனை மரணம் ஆட்கொண்டு விடுமாதலால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்றுவது சிறந்தது. இல்லாவிடில் மறுமையில் அல்லாஹ்விடம் கடனாளியாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ كَانَ يَكُونُ عَلَىَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَ إِلاَّ فِي شَعْبَانَ. قَالَ يَحْيَى الشُّغْلُ مِنَ النَّبِيِّ أَوْ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1950

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை (அடுத்த ரமளானுக்கு முந்தைய மாதமான) ஷஅபான் மாதத்தில் தவிர வேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கு நான் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் சயீத் (ரஹ்)
நூல்: புகாரி 1950

Narrated Yahya bin sa’eed (rah):
`Aisha (ra) said, Sometimes I missed some days of Ramadan, but could not fast in lieu of them except in the month of Sha’ban. I used to be busy serving the Prophet (sal).
[Bukhari 1950]
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் (பின்னால்) வேறு நாட்களில், (விடுபட்ட நோன்புகளின் எண்ணிக்கையைக்) கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்.
திருக்குர்ஆன் 2:184
நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget