அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தனக்காக பிறர் எழுந்து நிற்க வேண்டுமென்று விரும்பினால்…?


தினம் ஒரு ஹதீஸ்-83

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ أَبِي مِجْلَزٍ، قَالَ خَرَجَ مُعَاوِيَةُ عَلَى ابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَامِرٍ فَقَامَ ابْنُ عَامِرٍ وَجَلَسَ ابْنُ الزُّبَيْرِ فَقَالَ مُعَاوِيَةُ لاِبْنِ عَامِرٍ اجْلِسْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ أَحَبَّ أَنْ يَمْثُلَ لَهُ الرِّجَالُ قِيَامًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
رواه أبو داود 5229

இப்னு ஸுபைர் (ரலி), இப்னு ஆமிர் (ரலி) இருக்குமிடத்திற்கு முஆவியா (ரலி) அவர்கள் வரும் போது, இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் உட்கார்ந்திருக்க, இப்னு ஆமிர் (ரலி) அவர்களோ எழுந்து நின்றார்கள். உடனே முஆவியா (ரலி) அவர்கள், எழுந்து நின்ற இப்னு ஆமிர் (ரலி) அவர்களை நோக்கி ‘உட்காருங்கள்! ‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்” எனக் கூற நான் செவிமடுத்துள்ளேன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மிஜ்லஸ் (ரஹ்)
நூல்: அபூதாவுத் 5229

Narrated AbuMijlaz (rah):
Mu’awiyah (ra) went out to Ibn az-Zubayr (ra) and Ibn Amir (ra). Ibn Amir (ra) got up and Ibn az-Zubayr (ra) remained sitting. Mu’awiyah (ra) said to Ibn Amir (ra): Sit down, for I heard the Messenger of Allah (sal) say: Let him who likes people to stand up before him prepare his place in Hell.
[Abudawud 5229]
Blogger Widget