அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை குறைத்து மதிப்பிடாமலிருக்க…


தினம் ஒரு ஹதீஸ்-27

செருப்பு இல்லாதவன் கவலை, கால் இல்லாதவனை பார்க்கும் வரை” என்பார்கள். உலகில் அனைத்திலும் மேலானவர், எவ்வித குறைகளுமற்றவர் என்று ஒருவரும் கிடையாது, செல்வம் இல்லாத ஒருவர் நோய்களின்றி இருப்பார், செல்வம் அதிகமுள்ள ஒருவர் ஆரோக்கியமற்றவராக இருப்பார், ஒன்றில் மேலான நிலையில் இருந்தாலும் ஒன்றில் கீழான நிலையில் தான் மனிதனானவன் இருப்பான், இந்நிலையில் எந்த விஷயமானாலும் நம்மை நமக்கு கீழ் நிலையில் உள்ளவர்களோடு பார்க்க வேண்டுமே தவிர, மேல் நிலையில் உள்ளவர்களோடு ஒப்பிடக் கூடாது, இப்படிச் செய்தால் தான் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளவைகளை குறைத்து மதிப்பிடாமல், அதில் திருப்தியுற்றவர்களாக இருக்க முடியும். மன நோய்களும் வராமல் இருக்கும்.
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَوَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْظُرُوا إِلَى مَنْ أَسْفَلَ مِنْكُمْ وَلاَ تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ فَهُوَ أَجْدَرُ أَنْ لاَ تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ
‏ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5671

உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5671

Abu Hurairah (ra) reported:
The Messenger of Allah (sal) said: “Look to those with a lesser status than you and do not look to those with a higher status, lets the favours of Allah seem insignificant to you.
[Muslim 5671]
Blogger Widget