அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...


தினம் ஒரு ஹதீஸ்-71

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ، – أَوْ عَنْ أَبِي أُسَيْدٍ، – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَقُلِ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ وَإِذَا خَرَجَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1165

உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா! உன் கருணையின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக!) என்று கூறட்டும். பள்ளிவாசலிலிருந்து வெளியேறும் போது,‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபள்லிக’ (இறைவா! உன்னிடம் நான் உன் அருட்(செல்வங்)களிலிருந்து வேண்டுகிறேன்)என்று கூறட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்கள்: அபூஹுமைத் (ரலி) & அபூஉஸைத் (ரலி)
நூல்: முஸ்லிம் 1165

Abu Humaid (ra) & Abu Usaid (ra) reported that the Messenger of Allah (sal) said:
When any one of you enters the mosque, he should say: Allaahum-maf-tahlee Abwaaba Rahmatika (O Allah! open for me the doors of Thy mercy)and when he steps out he should say: Allaahum-ma In-nee As`aluka Min Fallika(O Allah! I beg of Thee Thy Grace).
[Muslim 1165]
Blogger Widget