அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மறுமையில் தண்டிக்கப்படாமலிருக்க…


தினம் ஒரு ஹதீஸ்-173

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي حَصِينٍ، وَالأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، أَنَّهُمَا سَمِعَا الأَسْوَدَ بْنَ هِلاَلٍ، يُحَدِّثُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا مُعَاذُ أَتَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى الْعِبَادِ قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَنْ يُعْبَدَ اللَّهُ وَلاَ يُشْرَكَ بِهِ شَىْءٌ قَالَ أَتَدْرِي مَا حَقُّهُمْ عَلَيْهِ إِذَا فَعَلُوا ذَلِكَ فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُقَالَ أَنْ لاَ يُعَذِّبَهُمْ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 50

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “முஆத்! அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் அளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்று கூறிவிட்டு, “அவ்வாறு (அல்லாஹ்வையே வணங்கி, அவனுக்கு இணை கற்பிக்காமல்) செயல்பட்டு வரும் அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதான உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் அளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இத்தகைய) அடியார்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்: முஸ்லிம் 50

Narrated Mu’adh bin Jabal (ra) that the Messenger of Allah (sal) said: Mu’adh, do you know the right of Allah over His bondsmen? He (Mu’adh (ra)) said: Allah and His Apostle know best. He (the Messenger of Allah (sal)) said:That Allah alone should be worshipped and nothing should be associated with Him. He (the Holy Prophet (sal)) said: What right have they (bondsmen) upon Him in case they do it? He (Mu’adh (ra)) said: Allah and His Apostle know best. He (the Holy Prophet (sal)) said: That He would not punish them.
[Muslim 50]

ஷிர்க் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget