அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆவிற்கு ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழி…


தினம் ஒரு ஹதீஸ்-119

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ إِنَّ الأَذَانَ يَوْمَ الْجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى الْمِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ ـ رضى الله عنهما ـ فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ ـ رضى الله عنه ـ وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الْجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى ‏الزَّوْرَاءِ فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 916

ஜுமுஆ நாளில் சொல்லப்படும் முதல் தொழுகை அறிவிப்பு (பாங்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் இமாம் (உரையாற்றுவதற்கு முன்) சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததுமே சொல்லப்பட்டுவந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சி காலத்தின் போது மக்கள் தொகை உயர்ந்து விட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் மூன்றாவது தொழுகை அறிவிப்பு சொல்லும்படி கட்டளையிட்டார்கள். ஆகவே, (மதீனாவின் கடைவீதியிலுள்ள) ஸவ்ரா எனுமிடத்தில்தொழுகை அறிவிப்புச் சொல்லப்பட்டது.(தொழுகை அறிவிப்பு விஷயத்தில் இரண்டு பாங்கு ஒரு இகாமத் எனும்) அந்த நிலை நிலைபெற்று விட்டது.
அறிவிப்பவர்: சாயிப் பின் யஸீத் (ரலி)
நூல்: புகாரி 916

Narrated Saib bin Yazid (ra):
In the lifetime of Allah’s Messenger (sal), and Abu Bakr (ra) and `Umar (ra), the Adhan for the Jumua prayer used to be pronounced after the Imam had taken his seat on the pulpit. But when the people increased in number during the caliphate of `Usman (ra), he introduced a third Adhan (on Friday for the Jumua prayer) and it was pronounced at Zaura’ and that new state of affairs remained so in the succeeding years.
[Bukhari 916]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget