அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அழைப்பாளர்கள்...


தினம் ஒரு ஹதீஸ்-30

ஒருவர் பிறரை நன்மையான விஷயங்களின் பக்கம் அழைத்து, அவர் கூறியதை யார் யார் பின்பற்றினார்களோ அவர்களுக்கும் நன்மை உண்டு, அவர்கள் அதைச் செய்ய இவர் காரணமாயிருப்பதால் அதே நன்மை இவருக்கும் கிடைக்கும். அதே போல் ஒருவர் பிறரை தீய விஷயங்களின் பக்கம் அழைத்து, அவர் கூறியதை யார் யார் பின்பற்றினார்களோ அவர்களுக்கும் பாவம் சேரும், அவர்கள் அதைச் செய்ய இவர் காரணமாயிருப்பதால் அதே பாவம் இவருக்கும் கிடைக்கும். நாம் எதைச் சொல்கிறோமோ அதன் விளைவிலும் நமக்கும் பங்கு உண்டு.
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَا عِيلُ، -يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لاَ يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5194

(மக்களை) நல்வழிக்கு அழைத்தவருக்கு , அவரைப் பின்தொடர்ந்தவர்களின் நன்மைகளைப் போன்றது உண்டு. அது அ(வ்வாறு பின் தொடர்ந்த)வர்களி ன் நன்மையில் எதையும் குறைத்துவிடாது.தவறான வழிக்கு மக்களை அழைத்தவருக்கு , அவரைப் பின் தொடர்ந்தவர்களுக்குரிய பாவங்களைப் போன்றது உண்டு. அது அவர்களது பாவத்தில் எதையும் குறைத்து விடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5194

Abu Huraira (ra) reported: Allah’s Messenger (sal) as saying:
He who called (people) to righteousness, there would be reward (assured) for him like the rewards of those who adhered to it, without their rewards being diminished in any respect.And he who called (people) to error, he shall have to carry (the burden) of its sin, like those who committed it, without their sins being diminished in any respect“.
[Muslim 5194]
Blogger Widget