அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஹதீஸும் மார்க்க ஆதாரமே...


தினம் ஒரு ஹதீஸ்-48

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக எனக்கு வேதமும் (குர்ஆனும்), அதனுடன் அது போன்றதும் (ஹதீஸும்) கொடுக்கப்பட்டுள்ளது” என்பது நபி (ஸல்) அவர்களின் கூற்று. (அபூதாவூத் 3990) இதிலிருந்து ஹதீஸும் வஹீ தான் என்பதையும், அதையும் மார்க்க ஆதாரமாக ஏற்கத் தான் வேண்டுமென்பதையும் அறியலாம். இப்படியிருக்கையில் நாம் தினமும் ஹதீஸ்களைப் பதிவதைக் கண்டு (ஹதீஸ்களை ஏற்காத) ஒரு சகோதரர் முகநூலில் நேற்று, “தினம் ஒரு குர்ஆன் வசனத்தைப் பதியுங்கள். ஹதீஸை ஏற்க முடியாது” என்ற ரீதியில் ஒரு கருத்தைப் பதிந்தார். இவரைப் போன்றவர்கள் பற்றி நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும், எச்சரிக்கையும்: (மற்றும் அவருக்காக குர்ஆனின் சில வசனங்கள்:)
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، فِي بَيْتِهِ أَنَا سَأَلْتُهُ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، ثُمَّ مَرَّ فِي الْحَدِيثِ قَالَ أَوْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الأَمْرُ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ أَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 13

நான் கட்டளையிட்ட, அல்லது தடுத்த ஒரு செய்தி (ஹதீஸ்) ஒருவனுக்கு கிடைக்கும் போது, ‘(அதெல்லாம்) எனக்குத் தெரியாது, அல்லாஹ்வின் வேதத்தில் (குர் ஆன்) எதை பெறுகிறோமோ அதையே பின்பற்றுவோம்’ என்று ஆசனத்தில் சாய்ந்து கொண்டு (அதாவது அலட்சியமாக) ஒருவன் கூறக்கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராபிவு (ரலி)
நூல்: இப்னுமாஜா 13

It was narrated from Abu Rafi’ (ra) that The Messenger of Allah (sal) said: Let me not find one of you reclining on his couch when he hears something regarding me which I have commanded or forbidden and saying: We do not know. What we found in Allah’s Book we have followed.
[Ibnmajah 13]
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார்.
திருக்குர்ஆன் 4:80
இவர் (முஹம்மது) நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார்.
திருக்குர்ஆன் 7:157
“அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர்.
திருக்குர்ஆன் 4:61
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!
திருக்குர்ஆன் 8:20
Blogger Widget