அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஜுமுஆ தொழுகைக்கு முன் தொழ வேண்டியவை…


தினம் ஒரு ஹதீஸ்-147

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، قَالَ دَخَلَ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ أَصَلَّيْتَ قَالَ لاَقَالَ فَصَلِّ رَكْعَتَيْنِ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 931

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), நீர் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லைஎன்றார். (எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 931

Narrated Jabir bin Abdullah (ra):
A man entered the Masjid while the Prophet (sal) was delivering the Khutba. The Prophet (sal) said to him, “Have you prayed?” The man replied in the negative. The Prophet (sal) said, “Pray two rak`at.
[Bukhari 931]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget