அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நேர்த்திக்கடன் செய்யாதீர்கள்...


தினம் ஒரு ஹதீஸ்-24

நேர்ச்சை என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய ஒன்று. அந்நேர்ச்சையானது அல்லாஹ்விற்கு மாறு செய்யாத வகையிலும், தன் கைவசத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்த நேர்ச்சையையும் செய்வதை தவிர்ப்பது சிறந்தது. ஆனால் செய்து விட்டால் நிறைவேற்றுவது அவசியம்.

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي الدَّرَاوَرْدِيَّ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” لاَ تَنْذُرُوا فَإِنَّ النَّذْرَ لاَ يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ “
رواه ﻣﺴﻠﻢ 3371

நேர்த்திக்கடன் செய்யாதீர்கள். ஏனெனில், நேர்த்திக்கடன் விதியிலுள்ள எதையும் மாற்றி விடாது. அதன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது. (அவ்வளவு தான்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 3371

Abu Hurairah (ra) reported: Allah’s Messenger (sal) as saying:
Do not take vows, for a vow has no effect against Fate; it is only from the miserly that something is extracted“.
[Muslim 3371]
Blogger Widget