அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மறுமையின் முதல் நிலை...


தினம் ஒரு ஹதீஸ்-9

மறுமை நாளின் போது மரணித்தவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படும். அத்தீர்மானம் எவ்வகையில் அமையும் என்பதை இறைவனால் முன் கூட்டியே காட்டப்படுவதே மண்ணறை வாழ்க்கை. இவ்வுலகிலிருந்து மரணித்த பின், மறுமை நாளிற்கு முன் வரையுள்ள வாழ்க்கையே மண்ணறை வாழ்க்கை எனப்படும். அத்தகைய மண்ணறை வாழ்க்கை வேதனையுடன் அமைந்து விடுமேயானால் அதற்குப் பின் கிடைக்கக் கூடியது நரகம் என்று அர்த்தம். மண்ணறை வாழ்க்கை வேதனையின்றி அமையுமேயானால் அதற்குப் பின் கிடைக்கக் கூடியது சொர்க்கம் என்று அர்த்தம். எனவே மண்ணறை தான் மறுமையின் முதல் நிலை.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاق, حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ, حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ, عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ, عَنْ هَانِئٍ مَوْلَى عُثْمَانَ, قَالَ : كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَإِذَا وَقَفَ عَلَى قَبْرٍ يَبْكِي حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ, فَقِيلَ لَهُ تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ, وَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, قَالَ إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ, فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ, وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ قَالَ : وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4265

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்.”சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன்?” என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். “மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (“எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் ” என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்.)
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)
நூல்: இப்னுமாஜா 4265

Narrated Haani’ (rah):
when ‘Uthman ibn ‘Affaan (ra) stood by a grave he would weep until his beard became wet. It was said to him, “You remember Paradise and Hell and you do not weep, but you weep because of this?” He said, “The Messenger of Allaah (sal) said: “The grave is the first of the stages of the Hereafter; whoever is saved from it, whatever comes afterwards will be easier for him, but if he is not saved from it, what comes afterwards will be worse for him.‘” And the Messenger of Allaah (sal) said: “I have never seen any scene but the grave is more frightening than it.
[Ibnmajah 4265]
Blogger Widget