அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நோன்பு திறக்கையில் பேணவேண்டியவை…


தினம் ஒரு ஹதீஸ்-216

நோன்பு திறக்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் உணவை விட்டு விட்டு தொழப் போகிறேன் என்று பாதி பசியுடன் சென்று விடக் கூடாது, முதலில் பசியாறும் அளவு உணவை உண்ண வேண்டும், பின்னர் தான் தொழ செல்ல வேண்டும். (நோன்பு நேரம் என்பதால் அதற்கேற்றவாறு இப்பதிவு, நோன்பு திறக்கையில் மட்டுமல்ல எக்காலத்திற்கும், எப்போதைக்குமான சட்டமும் இதுவே…)
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا قُرِّبَ الْعَشَاءُ وَحَضَرَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ الْمَغْرِبِ وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 967

நீங்கள் மஃக்ரிப் தொழுவதற்கு முன்னர் (உங்கள் முன்) இரவு உணவு வைக்கப்பட்(டு, அத்தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்)டால் முதலில் உணவை உண்ணத் தொடங்குங்கள். உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 967

Anas bin Malik (ra) reported:
The Messenger of Allah (sal) said: When the supper is brought before you, and it is also the time to say magrib prayer, first take food before saying evening prayer and do not hasten (to prayer, leaving aside the food).
[Muslim 967]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget