அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பிறருக்குத் தொல்லை தரும் வகையில் நம் செயல்பாடு இருக்கக் கூடாது…


தினம் ஒரு ஹதீஸ்-238

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ، قَالَ كُنَّا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْجُمُعَةِ فَجَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍجَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم اجْلِسْ فَقَدْ آذَيْتَ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 945

நாங்கள் நபித்தோழரான அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தினத்தின் போது இருக்கையில் ஒரு மனிதர், அமர்ந்திருந்த மக்க(ளின் பிடரி)ளை தாண்டிக் கொண்டு வந்தார். உடனே அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் இப்படி அமர்ந்திருந்த மக்க(ளின் பிடரி)ளை தாண்டிக் கொண்டு வருவதைக் கண்டு அவரிடம், “உட்கார்வீராக! நீர் மக்களுக்கு சிரமம் கொடுக்கின்றீர்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ அல்-ஜக்கரியா (ரஹ்)
நூல்: அபூதாவூத் 945

Narrated Abu al-Zahiriyyah (rah):
We were in the company of ‘Abdullah bin Busr (ra), the Companion of the Prophet (sal), on a Friday. A man came and stepped over the people. ‘Abdullah bin Busr (ra) said: A man came and stepped over the people while the Prophet (sal) was giving the sermon on Friday. The Prophet (sal) said: Sit down, you have annoyed (the people).
[Abudawud 945]

ஜுமுஆ சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget