அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையின் ரக்அத்களைக் குறைத்தோ / அதிகப்படுத்தியோ தொழுதிருந்தால்…


தினம் ஒரு ஹதீஸ்-115

ரக்அத்களை குறைத்திருந்தால்
ரக்அத்களை அதிகப்படுத்திருந்தால்
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ أَحَقٌّ مَا يَقُولُ قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ
‎ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1227
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ خَمْسًا فَقِيلَ لَهُ أَزِيدَ فِي الصَّلاَةِ فَقَالَ وَمَا ذَاكَ قَالَ صَلَّيْتَ خَمْسًا. فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ
‎ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1226
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத்கள் தொழுகையான) லுஹ்ரையோ அஸ்ரையோ (இரண்டு ரக் அத்கள் மட்டும்) தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள்.அப்போது துல்யதைன்’ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், இவர் கூறுவது உண்மைதானா? எனக் கேட்ட போது அவர்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (விடுபட்ட) பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1227
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள்.உடனே அவர்களிடத்தில் தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம்? எனக் கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள் என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 1226
Narated Abu Hurairah (ra):
The Prophet (sal) led us in the `Asr or the Zuhr prayer and finished it with Taslim.Dhul-Yadain said to him, “O Allah’s Messenger! Has the prayer been reduced?” The Prophet (sal) asked his companions in the affirmative. So Allah’s Messenger (sal) offered two more rak`at and then performed two prostrations.
[Bukhari 1227]
Narrated Abdullah bin Mas’ud (ra):
Once Allah’s Messenger (sal) offered five rak`at in the Zuhr prayer, and somebody asked him whether there was some increase in the prayer. Allah’s Messenger (sal) said, “What is that?” He said, “You have offered five rak`at.” So Allah’s Messenger (sal) performed two prostrations of Sahu after Taslim.
[Bukhari 1226]

Blogger Widget