அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

நோன்பை முறிப்பதன் பரிகாரங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-228

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ رَجُلٌ، فَقَالَ ‏يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ‏‎‏ قَالَ ‏مَا لَكَ‏‎‏ قَالَ ‏وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ‏‎‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا‏‎‏ قَالَ ‏لاَ‏‎‏ قَالَ ‏فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ‏‎‏ قَالَ ‏لاَ‏‎‏ فَقَالَ ‏فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا‏‎‏ قَالَ ‏لاَ‏‎‏ قَالَ فَمَكَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَرَقٍ فِيهَا تَمْرٌ ـ وَالْعَرَقُ الْمِكْتَلُ ـ قَالَ ‏أَيْنَ السَّائِلُ‏‎‏ فَقَالَ ‏أَنَا‏‎‏ قَالَ ‏خُذْهَا فَتَصَدَّقْ بِهِ‏‎‏ فَقَالَ ‏الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا ـ يُرِيدُ الْحَرَّتَيْنِ ـ أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِي‏‎‏ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ ‏أَطْعِمْهُ أَهْلَكَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1936

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது ஒருவர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?‘ என்று கேட்டார்கள். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி (என் நோன்பை முறித்து) விட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?‘ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!” என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?‘ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இல்லை!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?‘ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை!” என்றார். நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் ‘கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். ‘நானே!” என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!‘ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? அல்லாஹ்வின் மீதாணையாக! மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936

Narrated Abu Hurairah (ra):
While we were sitting with the Prophet (sal) a man came and said, “O Allah’s Messenger! I have been ruined.” Allah’s Messenger (sal) asked what was the matter with him. He replied “I had sexual intercourse with my wife while I was fasting.” Allah’s Messenger (sal) asked him, “Can you afford to manumit a slave?” He repliedin the negative. Allah’s Messenger (sal) asked him, “Can you fast for two successive months?” He replied in the negative. The Prophet (sal) asked him, “Can you afford to feed sixty poor persons?” He replied in the negative. The Prophet (sal) kept silent and while we were in that state, a big basket full of dates was brought to the Prophet (sal). He asked, “Where is the questioner?” He replied, “I (am here).” The Prophet (sal) said (to him), “Take this (basket of dates) and give it in charity.” The man said, “Should I give it to a person poorer than I? By Allah; there is no family between its (i.e. Medina’s) two mountains who are poorer than I.” The Prophet (sal) smiled till his premolar teeth became visible and then said, ‘Feed your family with it.
[Bukhari 1936]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…


Blogger Widget