அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

மறுமை தண்டணையை இம்மையிலேயே வேண்டி பிரார்திக்கலாமா?


தினம் ஒரு ஹதீஸ்-23

யா அல்லாஹ்! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!
மறுமையில் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் மறுமை தண்டணையை இம்மையிலேயே வேண்டி பிரார்திக்கக் கூடாது. அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற பேரன்பு கொண்டவன். அவனிடம் இம்மை, மறுமை இரண்டிலும் நல்லதை வேண்டியே பிரார்திக்க வேண்டும்.
‎حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَادَ رَجُلاً مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ”هَلْ كُنْتَ تَدْعُو بِشَىْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ ” قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ”سُبْحَانَ اللَّهِ لاَ تُطِيقُهُ – أَوْ لاَ تَسْتَطِيعُهُ – أَفَلاَ قُلْتَ اللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ ” قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ
‏ ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 5216

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ இறைவனிடம் ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்து வந்தேன்” என்று கூறினார். அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) “சுப்ஹானல்லாஹ்!” (அல்லாஹ் தூயவன்) “உன்னால் அதைத் தாங்க முடியாது’ என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 5216

Anas (ra) reported that Allah’s Messenger (sal) visited a person from amongst the Muslims in order to inquire (about his health) who had grown feeble like the chicken. Allah’s Messenger (sal) said: Did you supplicate for anything? He said: Yes. I used to utter (these words): O Allah! Impose punishment upon me earlier in this world, what Thou art going to impose upon me in the Hereafter. Thereupon Allah’s Messenger (sal) said: “Subhan Allah” (Hallowed be Allah), you have neither the power nor forbearance to take upon yourself (the burden of His Punishment). Why did you not say this: O Allah, grant us good in the world and good in the Hereafter, and save us from the torment of Fire. He (the Holy Prophet) made this supplication (for him) and he was all right.
[Muslim 5216]
Blogger Widget