அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

கடமையான தொழுகை முடித்தவுடன் அதே இடத்தில் சுன்னத் தொழலாமா?


தினம் ஒரு ஹதீஸ்-155

சிலர் கடமையான தொழுகை முடிந்ததும், உடனே அதே இடத்தில் எழுந்து நின்று சுன்னத் தொழ ஆரம்பித்து விடுவார்கள், இரு தொழுகைகளுக்கும் இடையில் வேறு செயல்கள் செய்யாமல் இது போல் தொடர்ச்சியாக தொழுவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது, கடமையான தொழுகை முடிந்ததும் (அதையும் சுன்னத் தொழுகையும் பிரித்துக் காட்டும் செயல்களான) திக்ர், துஆ செய்தோ, அல்லது வேறு பேச்சுக்கள் மூலமோ அல்லது அவ்விடத்தை விட்டு நகன்று செல்வது போன்ற வேறு செயல்கள் செய்த பின் தான் சுன்னத் தொழ வேண்டும், மாறாக கடமையான தொழுகை தொழுத உடன் அதே இடத்தில் எழுந்து சுன்னத் தொழக் கூடாது.,
‎حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ، بْنُ عَطَاءِ بْنِ أَبِي الْخُوَارِ أَنَّ نَافِعَ بْنَ جُبَيْرٍ، أَرْسَلَهُ إِلَى السَّائِبِ ابْنِ أُخْتِ نَمِرٍ يَسْأَلُهُ عَنْ شَىْءٍ، رَآهُ مِنْهُ مُعَاوِيَةُ فِي الصَّلاَةِ فَقَالَ نَعَمْ صَلَّيْتُ مَعَهُ الْجُمُعَةَ فِي الْمَقْصُورَةِ فَلَمَّا سَلَّمَ الإِمَامُ قُمْتُ فِي مَقَامِي فَصَلَّيْتُ فَلَمَّا دَخَلَ أَرْسَلَ إِلَىَّ فَقَالَ لاَ تَعُدْ لِمَا فَعَلْتَ إِذَا صَلَّيْتَ الْجُمُعَةَ فَلاَ تَصِلْهَا بِصَلاَةٍ حَتَّى تَكَلَّمَ أَوْ تَخْرُجَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَنَا بِذَلِكَ أَنْ لاَ تُوصَلَ صَلاَةٌ حَتَّى نَتَكَلَّمَ أَوْ نَخْرُجَ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1603

நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், என்னை சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் அனுப்பி “(ஒரு முறை) நீங்கள் முஆவியா (ரலி) அவர்களுடன் ஜுமுஆ தொழுதுவிட்டு, அதே இடத்தில் நின்று (கடமையான தொழுகைக்கும் கூடுதலான தொழுகைக்குமிடையே பிரிக்கக்கூடிய செயல்கள் ஏதும் செய்யாமல்) தொடர்ந்து தொழுதீர்கள். அதைக் கண்ட முஆவியா (ரலி) அவர்கள் என்ன கூறினார்கள்?” என்பது பற்றிக் கேட்கச் சொன்னார்கள். (நான் அவ்வாறே கேட்டபோது) சாயிப் (ரலி) அவர்கள், “ஆம்; நான் முஆவியா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்த அறையில் ஜுமுஆ தொழுதேன். இமாம், ஸலாம் கொடுத்ததும் நான் உடனே அதே இடத்தில் எழுந்து (கூடுதலான தொழுகை) தொழுதேன். முஆவியா (ரலி) அவர்கள் (ஜுமுஆ தொழுததும் எழுந்து) தமது அறைக்குள் நுழைந்து, என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது என்னிடம்) அவர்கள், “இனிமேல் இவ்வாறு செய்யாதீர்! ஜுமுஆ தொழுததும் (ஏதேனும் வெளிப்பேச்சு) பேசாதவரை, அல்லது பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் செல்லாத வரை தொழாதீர்!இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதாவது, (கடமையான) ஒரு தொழுகைக்கும் (கூடுதலான) மற்றொரு தொழுகைக்குமிடையே ஏதேனும் பேச்சுகள் பேசாத வரை, அல்லது (பள்ளிவாசலில் இருந்து) புறப்பட்டுச் செல்லாத வரை அவ்விரு தொழுகைகளையும் (சேர்ந்தாற்போல்) அடுத்தடுத்து தொழக் கூடாது” என்று கூறினார்கள் என்றார்கள்.
அறிவிப்பவர்: உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1603

‘Umar bin ‘Ata bin Abi Al-Khuwar (rah) narrated that Nafi bin Jubair (rah) sent him to As-Sa’ib bin Yazid (rah), asking him regarding something Mu’awiyah (ra) had seen him do in the prayer. He said: “I prayed Jum’uah with Mu’awiyah (ra) in his enclosure and when he finished, I stood up in my place and prayed. When he went inside he sent for me and said ”Do not repeat what you have just done. If you pray Jum’uah don’t join it with another prayer until you speak or exit the masjid. The Prophet (sal) ordered us to separate between prayers. One prayer mustn’t be joined with another until you speak or exit.
[Muslim 1603]
Blogger Widget