அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

குர்ஆன் கூறும் ஸக்கூம் எத்தகையது?


தினம் ஒரு ஹதீஸ்-36

ஸக்கூம் என்னும் மரம் நரகவாசிகளின் உணவாக இருக்கும் என்றுதிருக்குர்ஆன் 37:62-66, 44:43-56, 56:51-53 ஆகிய வசனங்கள் கூறுகிறது, அத்தகைய ஸக்கூம் எவ்வளவு அபாயகரமானது என்பதை பின்வரும் நபிமொழியிலிருந்து அறியலாம்.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ هَذِهِ الآيَةَ اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنْتُمْ مُسْلِمُونَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلملَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ فِي دَارِ الدُّنْيَا لأَفْسَدَتْ عَلَى أَهْلِ الدُّنْيَا مَعَايِشَهُمْ فَكَيْفَ بِمَنْ يَكُونُ طَعَامَهُ
ﺳﻨﻦ ﺍﻟﺘﺮﻣﺬﻱ2510

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள். நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். (திருக்குர்ஆன் 3:102)” என்ற வசனத்தை ஓதினார்கள். மேலும் அவர்கள் (நரகின் கொடுமையை விளக்கும் விதத்தில்), “ஸக்கூமிலிருந்து ஒரு துளி இந்த உலகத்தில் விழுந்தால் உலகத்தில் இருப்பவர்களின் வாழ்க்கை நாசமாகி விடும். (எனில்) அதை உணவாக கொண்டவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ 2510

Ibn Abbas (ra) reported:
The Messenger of Allah (sal) recited the following verse: “Fear Allah as He should be feared. Do no die except as Muslims (Al Quran 3:102)“. Then he said, “If a drop of Zaqqum would have fallen into a house in this world, it would have spoiled all the provisions of the people of this world. Then how will it be with one whose food it has become?
[Tirmidhi 2510]
தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
திருக்குர்ஆன் 20:74
Blogger Widget