அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இரவுத்தொழுகை ரக்அத்களின் எண்ணிக்கை-3



தினம் ஒரு ஹதீஸ்-215

12+1 ரக்அத்கள்:

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ – قَالَ – لأَرْمُقَنَّ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم اللَّيْلَةَ، قَالَ فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ أَوْ فُسْطَاطَهُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا، ثُمَّ أَوْتَرَ، فَذَلِكَ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1413

நான் ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை (கண்விழித்து)க் கவனிக்கப்போகிறேன் என (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதலில்) சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு மிக மிக மிக நீளமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாக இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களையும்விடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களும் அதற்கு முந்திய இரு ரக்அத்களைவிடச் சுருக்கமாகவே இருந்தன. பிறகு (ஒரு ரக்அத்) வித்ருத் தொழுதார்கள். இவை (மொத்தம்) பதிமூன்று ரக்அத்களாகும்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1413

Narrated Zaid bin Khalid al-Juhani (ra):
I shall watch the prayer of the Messenger of Allah (sal) at night. The Messenger of Allah (sal) prayed two light rak’ahs, and then prayed two long, long, long rak’ahs. He then prayed two rak’ahs that were not so long as the two rak’ahs before them; he then prayed two rak’ahs that were less in duration, than the rak’ahs before them; again he prayed two rak’ahs that were less in length then the preceding rak’ahs; he then prayed two rak’ahs that were less in length than the previous rak’ahs. This made altogether thirteen rak’ahs.
[Muslim 1413]

நோன்பு சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
மேலும், தொடர்புடைய பிற பதிவு: நோன்பு திறப்பதைத் தாமதிக்கக் கூடாது…



Blogger Widget