அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

உருவப்படங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-398

சிலர் தங்கள் வீடுகளில் சுவற்றில் முன்னோர்களின் போட்டோக்களைத் தொங்க விடுகின்றனர், இது போன்ற உருவப்படங்கள், உருவச்சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை, ஆனால் இவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு, கால்மிதியடியில் உருவம், தலையணையில் உருவம் போன்ற மதிப்பில்லாத உருவங்களுக்கு அனுமதி உண்டு, குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் வைத்துக் கொள்ளலாம், துணிகளில் சிறு அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி உண்டு, உயிற்றைகளின் உருவப்படங்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம், அதில் பிற மதத்தினரால் புனிதமாகக் கருதப்படும் உயிற்றவைகளின் படங்கள், சிலைகளுக்கும் அனுமதி இல்லை..
حَدَّثَنَا مَسْعُودُ بْنُ جُوَيْرِيَةَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَلِيٍّ، قَالَ صَنَعْتُ طَعَامًا فَدَعَوْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَجَاءَ فَدَخَلَ فَرَأَى سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَخَرَجَ وَقَالَ إِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻰ 5284

நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, அவர்களை (விருந்திற்கு) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச்சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, “எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் (இறைவனின் அருளைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸாயீ 5284

It was narrated that ‘Ali (ra) said: “I made some food and invited the Prophet (sal) (to come and eat). He came and entered, then he saw a curtain on which there were images, so he went out and said: ‘The Angels do not enter a house in which there are images.
[Nasa'i 5284]
Blogger Widget