அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பொறுமை…


தினம் ஒரு ஹதீஸ்-390

பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” (புகாரி 1469). முதலில் எந்த சூழ்நிலையில் மேற்கொள்வதன் பெயர் பொறுமை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். துன்பம் ஏற்பட்டவுடன் மார்க்கம் தடை செய்துள்ளவைகளையெல்லாம், செய்து விட்டு அத்துன்பமே மறந்து போகும் நிலையில் அமைதிக் கொள்வதன் பெயர் பொறுமை ஆகாது, ஏனெனில் நாள் செல்ல செல்ல துன்பத்தின் வலி தானாக மறைந்து விடும், அதில் நம் முயற்சி எதுவும் கிடையாது, மார்க்கம் சிறப்பித்துக் கூறும் பொறுமை என்பது ஒரு துன்பம் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்வதே ஆகும், இப்பொறுமைக்குத் தான் அல்லாஹ்விடம் நன்மையும் உண்டு.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ جَعْفَرٍ – حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلمالصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 1685

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1685

Anas bin Malik (ra) reported:
Allah’s Messenger (sal) said: “Endurance is to be shown at the first blow.
[Muslim 1685]
பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
திருக்குர்ஆன் 3:146
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 2:153
உமது இறைவனுக்காகப் பொறுத்துக் கொள்வீராக!
திருக்குர்ஆன் 74:7
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர்வழி பெற்றோர்.
திருக்குர்ஆன் 2:155-157
நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யாது.
திருக்குர்ஆன் 3:120
அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.
திருக்குர்ஆன் 76:12


Blogger Widget