அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழக்கூடாத மூன்று நேரங்கள்…


தினம் ஒரு ஹதீஸ்-353

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ عُلَيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ : سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ الْجُهَنِيَّ، يَقُولُ ثَلَاثُ سَاعَاتٍ كَانَ يَنْهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُصَلِّيَ فِيهِنَّ أَوْ أَنْ نَقْبُرَ فِيهِنَّ مَوْتَانَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتَّى تَرْتَفِعَ ، وَحِينَ يَقُومُ قَائِمُ الظَّهِيرَةِ حَتَّى تَمِيلَ الشَّمْسُ ، وَحِينَ تَضَيَّفُ لِلْغُرُوبِ حَتَّى تَغْرُبَ
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ 17047

சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை (1), நண்பகல் துவக்கமான சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரை (2), சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும் வரை (3) ஆகிய மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: அஹ்மத் 17047

Narrated ‘Uqbah bin ‘Amir al-Juhani (ra):
There were three times at which the Messenger of Allah (sal) used to forbid us to pray or bury our dead when the sun begins to rise till it is fully up (1), when the sun is at its height midway till it passes the meridian (2), and when the sun draws near to setting till it sets (3).
[Ahmad 17047]
Blogger Widget