அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையை அதற்குரிய நேரத்தில் அடைவதற்கான இறுதி நிலை…


தினம் ஒரு ஹதீஸ்-375

உதாரணமாக சுப்ஹு தொழுகையின் நேரமானது ஸஹ்ர் முடிவிலிருந்து (சுப்ஹு பாங்கு) சூரியன் உதிக்கும் முன் உள்ள நேரமாகும், இன்றைய (எங்கள் பகுதி) நிலவரமான 5:13 a.m to 6:33 a.m நேரத்தையே எடுத்துக் கொள்வோம், இதன் படி (பஜ்ரின் முடிவான) சூரியன் உதயமாகும் நேரமான 6:33 a.m க்குள் ஒருவர் பஜ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை தொழுது விட்டாரென்றால், அவர் பஜ்ர் தொழுகையை அதற்குரிய நேரத்திலேயே தொழுதவர் ஆவார், மற்ற தொழுகைகளுக்கும் இதே அடிப்படை தான்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 580

தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 580

Abu Hurayra (ra) reported that the Messenger of Allah (sal) said, “Whoever could get one rak`a of a prayer, (in its proper time) he has got the prayer.
[Bukhari 580]
தொழுகை சம்பந்தமாக எமது தளத்தின் அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget