அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

அழகிய முன் மாதிரி -6


தினம் ஒரு ஹதீஸ்-368

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ, قَالَ قُلْتُ عَائِشَةَ :أَيُّ شَيْءٍ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ إِذَا دَخَلَ بَيْتَهُ قَالَتْ كَانَ يَكُونَ فِي مَهْنَةِ أَهْلِهِ فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ قَامَ فَصَلَّى
ﺟﺎﻣﻊ ﺍﻟﺘﺮﻣﺬﻱ 2426

நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் போது என்ன (வேலை) செய்து வந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் போது) தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலை(ளில் தேவையான உதவி)களைச் செய்வார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)
நூல்: திர்மிதீ 2426

Narrated Aswad bin Yazeed (rah):
I asked `Aisha (ra) “What did the Prophet (sal) use to do in his house?” She replied, “He used to keep himself busy serving his family and when it was the time for prayer he would go for it.
[Tirmidhi 2426]

தொடர்புடைய பிற பதிவுகள்:அழகிய முன் மாதிரி  1,2,3,4 ,5
Blogger Widget