அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இஸ்திகாரா…


தினம் ஒரு ஹதீஸ்-300

சில சமயங்களில் நாம் ஒரு விஷயத்தில் இறங்கும் போது இதைச் செய்யலாமா வேண்டாமா, இதை செய்வதால் நமக்கு சாதகமாகுமா அல்லது பாதகமாகுமா என்று குழப்பம் ஏற்படும், அப்படி குழப்பமான நிலை நமக்கு ஏற்பட்டால் இரண்டு ரக்அத்கள் நஃபில் தொழுது விட்டு அதற்கென்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் நாம் நினைத்திருக்கும் அக்காரியத்தை செயல்படுத்துவதன் மூலம் நமக்கு அது நன்மை பயக்கும் பட்சத்தில் அக்காரியத்தின் பக்கம் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். மாறாக அக்காரியத்தை நாம் செய்தால் அதனால் நமக்கு தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் அக்காரியத்தை செயல்படுத்துவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றி விடுவான்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ ‏كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعَلِّمُنَا الاِسْتِخَارَةَ فِي الأُمُورِ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ‏‎‏ يَقُولُ ‏إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ ثُمَّ لِيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ‏ ‏اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي ـ أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ ـ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ‏‎‏ قَالَ ‏وَيُسَمِّي حَاجَتَهُ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 1162

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தருவது போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை (நஃபில்) தொழட்டும். பின்னர் (பின்வருமாறு) பிரார்த்திக்கட்டும்:
அல்லாஹும்ம! இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க. வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க. வ அஸ்அலுக்க மின் ஃபள்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு, வலா அக்திரு, வ தஅலமு வலா அஉலமு. வ அன்த்த அல்லாமல் ஃகுயூப். அல்லாஹும்ம! இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர கைருல்லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிபத்தி அம்ரீ (ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி), ஃபக்தர்ஹு லீ, வ யஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பாரிக் லீ ஃபீஹீ. வ இன் குன்த்த தஅலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருல் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆக்கிபத்தி அம்ரீ (ஃபீ ஆஜிலி அம்ரீ வஆஜிலிஹி), ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ. வக்தர்ஹு லீ அல்கைர ஹைஸு கான, ஸும்ம அர்ளினீ பிஹி.
(இறைவா! நான் உன் ஞானத்தின் மூலம் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உன் ஆற்றல் மூலம் நான் (இந்தக் காரியத்தில்) ஆற்றல்பெறக் கோருகிறேன். உன் மிகப் பெரும் அருட்கொடையிலிருந்து வேண்டுகிறேன். ஏனெனில், நீயே (அனைத்திற்கும்) ஆற்றல் பெற்றுள்ளாய். (நீயின்றி) நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிந்தவன். இறைவா! எனது இந்தக் காரியம் எனக்கு எனது மார்க்கத்திலும் எனது வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் (அல்லது என் உலக வாழ்விலும் மறுமை வாழ்விலும்) நன்மையானதாக அறிந்திருந்தால் இ(ந்தக் காரியத்தைச் செய்வ)தற்கு எனக்கு நீ ஆற்றலை வழங்குவாயாக! இதை எனக்கு எளிதாக்குவாயாக! பின்னர் இதில் எனக்கு சுபிட்சம் அளிப்பாயாக! இந்தக் காரியம் எனக்கு என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும் (அல்லது என் உலக வாழ்விலும் மறுமையிலும்) தீமையாகுமென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னை விட்டும் திருப்பி விடுவாயாக! என்னையும் இக்காரியத்தை விட்டும் திருப்பிவிடுவாயாக! நன்மை எங்கிருக்குமோ அந்த இடத்தில் (அதைச் செய்ய) எனக்கு ஆற்றலை வழங்குவாயாக! பிறகு அதனை மனத்திருப்தியுடன் என்னை ஏற்கச் செய்வாயாக!)
பிறகு அவர் தமது தேவையைக் குறிப்பிடட்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 1162

Narrated Jabir bin `Abdullah (ra):
The Prophet (sal) used to teach us the way of doing Istikhara (Istikhara means to ask Allah to guide one to the right sort of action concerning any job or a deed), in all matters as he taught us the Surahs of the Qur’an.
The Prophet (sal) said, “If anyone of you thinks of doing any job he should offer a two rak`at prayer other than the compulsory ones and say (after the prayer):
‘Allahumma inni astakhiruka bi’ilmika, Wa astaqdiruka bi-qudratika, Wa as’alaka min fadlika Al-`azlm Fa-innaka taqdiru Wala aqdiru, Wa ta’lamu Wala a’lamu, Wa anta ‘allamu l-ghuyub. Allahumma, in kunta ta’lam anna hadha-lamra Khairun li fi dini wa ma’ashi wa’aqibati `Amri (fi’ajili `Amri wa’ajilihi) Faqdirhu wa yas-sirhu li thumma barik li Fihi, Wa in kunta ta’lamu anna hadha-lamra shar-run li fi dini wa ma’ashi wa’aqibati `Amri (fi’ajili `Amri wa ajilihi) Fasrifhu anni was-rifni anhu. Waqdir li al-khaira haithu kana Thumma ardini bihi.’
(O Allah! I ask guidance from Your knowledge, And Power from Your Might and I ask for Your great blessings. You are capable and I am not. You know and I do not and You know the unseen. O Allah! If You know that this job is good for my religion and my subsistence and in my Hereafter (or said: If it is better for my present and later needs) Then You ordain it for me and make it easy for me to get, And then bless me in it, and if You know that this job is harmful to me In my religion and subsistence and in the Hereafter (or said: If it is worse for my present and later needs) Then keep it away from me and let me be away from it. And ordain for me whatever is good for me, And make me satisfied with it).
The Prophet (sal) added that then the person should name (mention) his need.
[Bukhari 1162]
Blogger Widget