அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பெருநாள் தொழுகையில் ஓத வேண்டியவை…


தினம் ஒரு ஹதீஸ்-299

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ ضَمْرَةَ بْنِ سَعِيدٍ الْمَازِنِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الأَضْحَى وَالْفِطْرِ قَالَ كَانَ يَقْرَأُ فِيهِمَا ق وَالْقُرْآنِ الْمَجِيدِ وَ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
ﺳﻨﻦ ﺃﺑﻲ ﺩﺍﻭﺩ 976

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூவாக்கித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல் லைஸீ (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் (தொழுகை)களில் எ(ந்த அத்தியாயத்)தை ஓதுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூவாக்கித் (ரலி) அவர்கள் “காஃப் வல்குர்ஆனில் மஜீத்‘ எனும் (50ஆவது) அத்தியாத்தையும் “இக்தரபத்திஸ் ஸாஅத்து வன்ஷக்கல் கமர்‘ எனும் (54ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்)
நூல்: அபூதாவூத் 976

Narrated ‘Ubaidullah bin ‘Abdullah bin ‘Utbah bin Mas’ud (rah):
‘Umar bin al-Khattab (ra) asked Abu Waqid Awf bin al-haris al-Laisi (ra): What did the Messenger of Allah (sal) recite during the prayer on the day of sacrifice and on the breaking of the fast? He replied: He recited at both of them “Qaf wal-Qur’anil masjid” (Surah 50) and “Iqtarabatis sa_atu wansyaq qal qamar” (Surah 54).
[Abudawud 976]

பெருநாள் சம்பந்தமான சட்டங்களை அறிய இங்கேயும்துல்ஹஜ் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget