அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது…


தினம் ஒரு ஹதீஸ்-298

இரு பெருநாட்களிலும் நோன்பு வைக்கக் கூடாது, அது போல் ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய தினங்களிலும் நோன்பு வைக்கக் கூடாது.
وَحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ، الْهُذَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ
ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 2099

“அய்யாமுத் தஷ்ரீக்” (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 2099

Nubaisha bin Amr bin Awf al-Hudhali (ra) reported Allah’s Messenger (sal) as saying: The days of Tashriq (the three days following Eid al-Adha, namely the 11th, 12th and 13th of Dhu’l-Hajj) are the days of eating and drinking.
[Muslim 2099]
பெருநாள் சம்பந்தமான சட்டங்களை அறிய இங்கேயும்துல்ஹஜ் சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கேயும் கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget