அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

தொழுகையில் இமாமை முந்தாமலிருக்க வேண்டும்…


தினம் ஒரு ஹதீஸ்-260

தொழுகையில் இமாமானவர் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார், தொழுகையில் செய்யும் எந்தவொரு செயலையும் அவர் செய்தப் பின், தான் அவரைப் பின்பற்றி நாம் செய்ய வேண்டும், அவரை முந்திக் கொண்டு தொழுவதென்பது மறுமையில் தண்டணைக்குரிய செயலாகும்.
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ ـ أَوْ لاَ يَخْشَى أَحَدُكُمْ ـ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ
ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ 691

உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் (மறுமையில்) அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாக அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 691

Narrated Abu Huraira (ra):
The Prophet (sal) said, “Isn’t he who raises his head before the Imam afraid that Allah may transform his head into that of a donkey or his figure (face) into that of a donkey?
[Bukhari 691]

மேலும், தொழுகை சம்பந்தமான அனைத்துப் பதிவுகளையும் காண, இங்கே கிளிக் செய்யுங்கள்.
Blogger Widget