அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் செய்த நற்செயல்களின் நிலை…


தினம் ஒரு ஹதீஸ்-282

இணைவைத்த நிலையிலோ, அல்லது இறைநிராகரிப்பு மேற்கொண்ட நிலையிலோ செய்யப்படும் எந்த ஒரு நற்செயலுக்கும் அல்லாஹ்விடம் மறுமையில் எந்த நன்மையும் கிடைக்காது, அக்கொள்கையை விட்டு மனம் திருந்தி ஒருவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல்நெறியாக ஏற்றுக்கொள்வாரெனில், முன்பு முஸ்லிமல்லாத நிலையில் செய்த நற்செயலுக்கும் மறுமையில் நன்மை கிடைக்கும்.
حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ حَرْبٍ، ثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍأَ خْبَرَهُ ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ ، أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ أَوْ صِلَةِ رَحِمٍ ، أَفِيهَا أَجْرٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْلَمْتَ عَلَى مَا أَسْلَفْتَ مِنْ خَيْرٍ
ﺍﻟﻤﻌﺠﻢ ﺍﻟﻜﺒﻴﺮ ﻟﻠﻄﺒﺮﺍﻧﻲ 3021

அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தர்மம், அடிமை விடுதலை, உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்கூலி உண்டா, கூறுங்கள்?” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல்: தப்ரானீ / அல்முஃஜமுல் கபீர் 3021

Narrated Hakim bin Hizam (ra):
I said to the Prophet (sal), “O Messenger of Allah!, do you think if there is any reward (of the Lord with me on the Day of Resurrection) for the deeds of religious purification that I performed in the state of ignorance, such as charity, freeing a slave, cementing of blood-relations?” Upon this he (the Apostle of Allah) said to him: You have accepted Islam with all the previous virtues that you had practised.
[Tabrani / Al-Mu'jam al-kabir 3021]
Blogger Widget