அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பிராணிகள் விஷயத்தில் கவனம் தேவை…


தினம் ஒரு ஹதீஸ்-281

أَخْبَرَنَا الْحَكَمُ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ ، فَقِيلَ : لَا أَنْتِ أَطْعَمْتِيهَا وَسَقَيْتِيهَا ، وَلَا أَنْتِ أَرْسَلْتِيهَا فَتَأْكُلَ مِنْ خَشَاشِ الْأَرْضِ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ 2727

பூனையொன்றைச் சாகும்வரை கட்டி வைத்(துக் கொடுமைப்படுத்திய)தன் காரணத்தால் ஒரு பெண் நரகத்தில் நுழைந்தாள். அதைக் கட்டி வைத்திருந்த போது, அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; குடிப்பதற்கும் (எதுவும்) கொடுக்கவில்லை; பூமியின் புழுப்பூச்சி(கள் போன்ற அவற்றின் உணவு)களை (அதுவாக தேடித்) தின்பதற்கு அதை அவள் (அவிழ்த்து) விடவுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: தாரமீ 2727

Narrated Ibn `Umar (ra):
The Messenger of Allah (sal) said, “A woman entered the (Hell) Fire because of a cat which she had tied, neither giving it food nor setting it free to eat from the vermin of the earth.
[Darami 2727]
Blogger Widget