அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

பாவங்களிலேயே மூழ்கியிருந்தால்…


தினம் ஒரு ஹதீஸ்-262

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، وَالْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلاَنَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنَّ الْمُؤْمِنَ إِذَا أَذْنَبَ كَانَتْ نُكْتَةٌ سَوْدَاءُ فِي قَلْبِهِ فَإِنْ تَابَ وَنَزَعَ وَاسْتَغْفَرَ صُقِلَ قَلْبُهُ فَإِنْ زَادَ زَادَتْ فَذَلِكَ الرَّانُ الَّذِي ذَكَرَهُ اللَّهُ فِي كِتَابِهِ كَلاَّ بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
ﺳﻨﻦ ﺍﺑﻦ ﻣﺎﺟﻪ 4242

ஓர் இறைநம்பிக்கையாளர் பாவம் புரிகின்ற போது அவருடைய உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி பதியப்படுகின்றது. தான் செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்தி அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகையில் அவருடைய உள்ளமானது பரிசுத்தப் படுத்தப்படுகின்றது. மாறாக, அவர் (அதிலிருந்து மீளாமல்) மீண்டும் மீண்டும் பாவம் செய்து கொண்டேயிருப்பாரெனில் (கரும்புள்ளி பதியப்படுவதும் அதிகரித்து) அவருடைய உள்ளம் முழுவதையும் (நற்போதனைகள் பயன்தராத விதத்தில், இருளாக) சூழ்ந்து கொள்கின்றது. பாவமானது (கரும்புள்ளிகளாக அவருடைய) உள்ளத்தை சூழ்ந்து கொள்வதைப் பற்றி, அல்லாஹ் தனது வேதமான குர்ஆனில் “அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது (83:14)” என்று குறிப்பிடுகின்றான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 4242

Narrated Abu Hurayrah (ra):
The Messenger of Allah (sal) said: “If the believer commits a sin, a black spot appears on his heart. If he repents, gives it up and seeks forgiveness, his heart is cleansed, but if he does more then (that spot) increases until it covers his heart. That is the raan (covering of sin) which Allah mentioned in the Quran: “Nay! But on their hearts is the Raan (covering of sins and evil deeds) which they used to earn (83:14)
[Ibnmajah 4242]
Blogger Widget