அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் தமிழ், ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அதன் அரபு மூலத்தோடு தலைப்பு வாரியாக இத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் பலவீனமான செய்திகளும் அடையாளம் காட்டப்படும்...இன்ஷா அல்லாஹ்..

வித்ர் தொழுகைக்குப் பின்...


தினம் ஒரு ஹதீஸ்-448

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ إِشْكَابَ النَّسَائِيُّ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُبَيْدَةَ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ طَلْحَةَ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْوِتْرِ بِـ سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَوَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فَإِذَا سَلَّمَ قَالَ سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ ثَلاَثَ مَرَّاتٍ
ﺳﻨﻦ ﺍﻟﻨﺴﺎﺋﻲ 1720

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்கள்) வித்ர் தொழும் போது (முதல் ரக்அத்தில்) “ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா” (மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்ற (87 வது) அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” (கூறுவீராக: (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!) என்ற (109 வது) அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) “குல்ஹுவல்லாஹு அஹத்” (“அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக!) என்ற (112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பரிசுத்தமான அரசன் (அல்லாஹ்) தூய்மையானவன்) என்று மூன்று முறை கூறுவார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)
நூல்: நஸாயீ 1720

Narrated Ubayy bin Ka’b (ra):
The Messenger of Allah (sal) used to recite in Witr: “Sabbihisma rabbikal A’laa” (Glorify the Name of your Lord, the Most High) [chapter 87]; and “Qul yaa ayyuhal Kafiroon” (Say: O you disbelievers!) [chapter 109]; and “Qul huw-Allahu ahad” (Say: He is Allah, (the) One) [chapter 112]. And when he said the salam, he would say: “Subhanal Malikil Quddus” (Glory be to the Sovereign, the Most Holy) three times.
[Nasa'i 1720]


மேலும் தொடர்புடைய பிற பதிவுகள்: கடமையான தொழுகைக்குப் பின் ஓத வேண்டியவைகள்: 12345678
Blogger Widget